கிராண்ட்பாஸில் இருவர் கூரான ஆயுதங்களால் தாக்கி கொலை

கிராண்ட்பாஸில் இருவர் கூரான ஆயுதங்களால் தாக்கி கொலை

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2019 | 6:06 pm

Colombo (News 1st) கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில், மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் இருவர் கூரான ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் சென்ற சிலர் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இந்த கொலைகளுக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த இருவரும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆனமாலு ரங்க என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்