இளைஞர்கள் தீர்மானம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன்: சஜித் பிரேமதாச

இளைஞர்கள் தீர்மானம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன்: சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2019 | 7:51 pm

Colombo (News 1st) இளைஞர்களின் தோள் மீதேறி அரண்மனைக்கு சென்று இளைஞர்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, அவர்கள் தீர்மானம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமகாராம பகுதியில் அமைக்கப்பட்ட மூன்று கிராமங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்