யானைகள் தொடர்பான விபரங்களைத் திரட்ட திட்டம்

யானைகள் தொடர்பான விபரங்களைத் திரட்ட திட்டம்

by Staff Writer 14-08-2019 | 2:00 PM
Colombo (News 1st) நாடு முழுவதுமுள்ள யானைகள் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யானைகளைக் கணக்கிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் யானைகள் நடமாடும் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், 2 229 பகுதிகளில் 7 316 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தி இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 2011 ஆம் ஆண்டிலேயே இறுதியாக யானைகள் தொடர்பில் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போதைய கணக்கெடுப்பின் பிரகாரம் நாட்டில் 5 879 யானைகள் காணப்பட்டுள்ளன. இதேவேளை, யானைகள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகளுக்கான வௌிநபர்களை இணைத்துக் கொள்வதற்கும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம், 011 2888585 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, கண்காணிப்பாளராக இணைந்துகொள்ள முடியும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.