by Staff Writer 14-08-2019 | 5:45 PM
Colombo (News 1st) அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்காது, முதல் 4 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான செலவை உள்ளடக்கிய இடைக்கால கணக்கறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (13) சமர்ப்பித்ததுடன், அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவுள்ளமையால், அதன் பின்னர் நியமிக்கப்படும் புதிய அமைச்சரவைக்கு அமைவாகவும் அரசாங்கத்தின் புதிய கொள்கையை அடிப்படையாகவும் கொண்டு 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
அதற்கமைய, முதல் 4 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவை உள்ளடக்கிய இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.