வௌிவாரிப் பட்டதாரிகளை அரச சேவைப் பயிற்சியில் இணைக்க அரசு தீர்மானம்

வௌிவாரிப் பட்டதாரிகளை அரச சேவைப் பயிற்சியில் இணைக்க அரசு தீர்மானம்

வௌிவாரிப் பட்டதாரிகளை அரச சேவைப் பயிற்சியில் இணைக்க அரசு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2019 | 10:13 am

Colombo (News 1st) வேலை வாய்ப்பற்ற அனைத்து வௌிவாரிப் பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற 2 500 வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக பொருளாதார விவகார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

இம் மாத இறுதிக்கு முன்னர் அவர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும் என மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு வரை, 20 000 பேர் வெளிவாரிப் பட்டம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, உள்வாரிப் பட்டதாரிகள் 20 000 பேரை அரச சேவைக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அசங்க தயாரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

வௌிவாரிப் பட்டதாரிகளை அரச சேவைக்கான பயிற்சிகளுக்காக இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

நேற்றைய தினமும் வேலையற்ற பட்டதாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்