நிதி அமைச்சின் அதிகாரிகளை பஸ்களில் அனுப்ப வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

நிதி அமைச்சின் அதிகாரிகளை பஸ்களில் அனுப்ப வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2019 | 7:30 pm

Colombo (News 1st) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நிதி அமைச்சு மீது பகிரங்க குற்றச்சாட்டொன்றை இன்று முன்வைத்தார்.

தனது அமைச்சரவைப் பத்திரத்திற்கு தேவையான அனுமதியைப் பெறுவதில் காணப்படும் இடையூறு தொடர்பில் விளக்கிய போதே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2000 பஸ்களை கொண்டு வருவதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அமைச்சரவையில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நிதி அமைச்சின் அதிகாரிகள் அது தொடர்பில் சிந்திக்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் சொகுசு வாகனங்களில் பயணிப்பதால் பஸ்களிலும் ரயில்களிலும் பயணிக்கும் பொதுமக்கள் தொடர்பில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை என அர்ஜூன ரணதுங்க விமர்சித்தார்.

மேலும், நிதி அமைச்சிலுள்ள அனைத்து அதிகாரிகளினதும் வாகனங்களை இரண்டு மாதங்களுக்கு அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு பஸ்களிலும் ரயில்களிலும் அவர்களை அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்