டெக்ஸாஸிலுள்ள குடிவரவு, சுங்க அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

டெக்ஸாஸிலுள்ள குடிவரவு, சுங்க அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

டெக்ஸாஸிலுள்ள குடிவரவு, சுங்க அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2019 | 11:45 am

Colombo (News 1st) அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள குடிவரவு மற்றும் சுங்க அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமஷ்டி ஊழியர்களைக் குறிவைத்து திட்டமிட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளளப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்துள்ளது.

San Antonio விலுள்ள இந்த அலுவலகத்தின் மீது, உள்நாட்டு நேரப்படி அதிகாலை 3 மணிக்கு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகளவிலான துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்காரணமாக குறித்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள இரு கட்டடங்களில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும் FBI மேலும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தீயினால் காயங்கள் எவையும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்