English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Aug, 2019 | 8:50 pm
Colombo (News 1st) செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு – செஞ்சோலையில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எஸ்.சிவமோகன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
செஞ்சோலை தாக்குதலில் இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தையொருவர் பிரதான சுடரை ஏற்றி வைத்தார்.
செஞ்சோலை படுகொலை நினைவு தினம் யாழ். பல்கலைக்கழகத்திலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
19 May, 2022 | 07:35 PM
06 Nov, 2020 | 08:31 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS