நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

by Staff Writer 13-08-2019 | 10:32 AM
Colombo (News 1st) தென் மாகாணத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், வட மத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதில் அவதானமாக செயற்பட வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.