இரத்தினபுரியில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

இரத்தினபுரியில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

by Staff Writer 13-08-2019 | 3:59 PM
Colombo (News 1st) இன்று (13) காலை 8.30 முதல் நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 4 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி இரத்தினபுரி - கிரிஎல்ல பகுதியில் பதிவாகியுள்ளது. கிரிஎல்ல பகுதியில் 110 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 4 மணித்தியாலங்களில் இரத்தினபுரி பகுதியில் 103.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கேகாலை மாவட்டத்தின் ஹெமின்போட் பகுதியில் 85.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி - வேவல்தென்ன வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், குறித்த வீதியை பயன்படுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்