லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டது

by Staff Writer 13-08-2019 | 1:33 PM
Colombo (News 1st) வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு - காலிமுகத்திடல் வீதியில், லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முயற்சித்தபோதே லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்கும்போது பல்வேறு குளறுபடிகளும் மோசடிகளும் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் காரணங்களை முன்வைத்து, வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.