ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம்

ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம்

ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2019 | 7:59 am

Colombo (News 1st) நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் உள்ள 200 ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ரயில்வே திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 100 மத்திய நிலையங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரயில் சேவையை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுப்பதற்காக 12 ரயில் எஞ்சின்களும் 160 ரயில் பெட்டிகளும் 30 எரிபொருள் தாங்கிகளும் இறக்குமதி செய்யப்பட இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்