மலையகத்திற்கான ரயில் போக்குவரத்திற்கு சீனாவில் இருந்து ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

மலையகத்திற்கான ரயில் போக்குவரத்திற்கு சீனாவில் இருந்து ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

மலையகத்திற்கான ரயில் போக்குவரத்திற்கு சீனாவில் இருந்து ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2019 | 5:23 pm

Colombo (News 1st) சீன தயாரிப்பிலான S14 ரக ரயில் பெட்டிகள் சீனாவில் இருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

1839.5 மில்லியன் ரூபா செலவில் 9 ரயில் பெட்டிகள் சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிகள் மூன்றும் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள் இரண்டும் சிற்றுண்டிச்சாலைகளுக்கான ரயில் பெட்டி ஒன்றும் அடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டிகள் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்