மண்சரிவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நுவரெலிய வாழ் மக்களுக்கு அறிவித்தல்

மண்சரிவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நுவரெலிய வாழ் மக்களுக்கு அறிவித்தல்

மண்சரிவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நுவரெலிய வாழ் மக்களுக்கு அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2019 | 2:13 pm

Colombo (News 1st) பலத்த மழை காரணமாக மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலிய மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கொத்மலை மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்து நுவரெலிய மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் நிறுவகம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவிற்கான ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலம் தாழிறங்கல், கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலத்திலிருந்து திடீரென ஊற்றுகள் ஏற்படுதல் குறித்த அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மேலும் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்