எஸ்.பி. திசாநாயக்க உள்ளிட்ட சிலர் கோட்டாபயவிற்கு ஆதரவு

எஸ்.பி. திசாநாயக்க உள்ளிட்ட சிலர் கோட்டாபயவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2019 | 8:40 pm

Colombo (News 1st) தாம் உள்ளிட்ட குழுவினர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை ஆதரிப்பதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவிற்கான மக்களின் ஆதரவு குறித்து மிகவும் மகிழ்வும் பெருமையும் அடைய வேண்டும். இன்று அந்தக் கட்சி மிகப்பெரும் கட்சியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாக, டிஜிட்டல் கட்சியாக இந்த நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லாத வலிமையான பொறிமுறை உள்ள கட்சியாகக் காணப்படுகிறது, என எஸ்.பி.திசாநாயக்க கூறினார்.

சரத் அமுனுகம, டிலான் பெரேரா ஆகியோருடன் இணைந்து தாம் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானம் மிகவும் சரியானது எனவும் காலத்தின் தேவை எனவும் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முற்போக்கான, தேசப்பற்றுள்ள வேட்பாளரைக் கொண்டுள்ள முன்னணியுடன் இணைந்து வெற்றிபெறுவதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்