முதுகெலும்புள்ள வேட்பாளர் ஒருவரைப் பிரேரிக்குமாறு பிரதமர் கோரிக்கை

by Staff Writer 12-08-2019 | 4:00 PM
Colombo (News 1st) முதுகெலும்புள்ள வேட்பாளர் ஒருவரைப் பிரேரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைவருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் ரணால - ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இன்று (12) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்