கொழும்பு - கொச்சின் இடையிலான விமான சேவை மீண்டும்

கொழும்பு - கொச்சின் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 12-08-2019 | 2:15 PM
Colombo (News 1st) கொழும்புக்கும் கொச்சினுக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக விமான ஓடுபாதை நீரில் மூழ்கியதால் கடந்த 9ஆம் திகதி முதல் கொச்சின் வரையான விமான சேவையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருந்தது.