காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதில்

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதில்

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதில்

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2019 | 6:37 pm

Colombo (News 1st) வேறுபாடுகள் ஒருபோதும் பிளவாகிவிடக் கூடாது என காஷ்மீர் விவகாரத்தில் சீனாவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

சீன வௌிவிவகார அமைச்சர் வாங் யி யை பீஜிங்கில் சந்தித்துக் கலந்துரையாடிய, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள், ஒருபோதும் மோதலாகி விடக்கூடாது என்பதை இரண்டு நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம், மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் பாரிய எதிர்ப்பினை வௌியிட்டிருந்தது.

குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசம் பிரித்து உருவாக்கப்பட்டமைக்கு சீனா பலத்த கண்டனத்தை வௌியிட்டிருந்தது.

குறித்த கண்டனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சீன வௌிவிவகார அமைச்சருடனான இன்றைய சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கருத்து வௌியிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தமது உள்நாட்டுப் பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்