23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத் தொடர்; எட்டாம் இடத்தில் இலங்கை

23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத் தொடர்; எட்டாம் இடத்தில் இலங்கை

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2019 | 8:41 pm

Colombo (News 1st) 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி எட்டாமிடத்தை அடைந்துள்ளது.

23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத்தொடர் மியன்மாரில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டிகள் இன்று (11) நடத்தப்பட்டன.

அந்தப் போட்டியில் இலங்கை அணியும் அவுஸ்திரேலிய அணியும் மோதியுள்ளன.

போட்டியில் 3 – 0 என்ற சுற்றுக்கள் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியுள்ளது.

23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத் தொடர் வரலாற்றில் இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தொடரில் 4 குழுக்களின் கீழ் 16 அணிகள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்