யேமனின் ஏடன் துறைமுக நகர் பிரிவினைவாதிகளால் சுற்றிவளைப்பு

யேமனின் ஏடன் துறைமுக நகர் பிரிவினைவாதிகளால் சுற்றிவளைப்பு

யேமனின் ஏடன் துறைமுக நகர் பிரிவினைவாதிகளால் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2019 | 7:28 pm

Colombo (News 1st) யேமனின் முக்கிய துறைமுக நகரான ஏடனை அந்நாட்டின் தென்பகுதி பிரிவினைவாதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டு அரச படைகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, இந் நகரம் பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுதந்திரமான தென் பிராந்தியக் கோரிக்கையை முன்வைத்துள்ள, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவுடனான தென் பிராந்திய இடைக்கால கவுன்ஸில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

மேலும், ஏடனிலுள்ள இராணுவத் தளங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்தக் கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு இராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலடி வழங்கப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்