காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தெரிவு

காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தெரிவு

காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தெரிவு

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2019 | 2:23 pm

Colombo (News 1st) காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் இராஜினாமா ஏற்கப்பட்ட பின்னர், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செயலாளர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஆராய்ந்தது.

அதன்படி, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் காந்தியிடம் கோரப்பட்ட போதிலும் தனது இராஜினாமாவை திரும்ப பெறுவதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவராக ஒருவர் தெரிவுசெய்யப்படும் வரை சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக செயற்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்