எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர்

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர்

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2019 | 1:52 pm

Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் இன்று (11) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலேனா பி டெப்லிட்ஸூம் கலந்துகொண்டிருந்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்