by Bella Dalima 10-08-2019 | 8:42 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு நாளை (11) மாலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் தௌிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸவை, மஹிந்த ராஜபக்ஸ நாளை பெயரிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
நாளைய தினம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேட்பாளரைத் தெரிவு செய்வது சிரமமாக இருந்தால், சிறிகொத்த முன்பாக சங்கீதக் கதிரைப் போட்டியொன்றை நடத்துமாறும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.