கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை ஸ்தாபிக்க திட்டம்

கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 10-08-2019 | 7:13 PM
Colombo (News 1st) கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை விரைவில் ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதுவரை இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு செயற்பாடுகளுக்காக கொன்சியூலர் நாயகம் ஒருவர் செயற்படுவார் என ஜனாதிபதி கூறியுள்ளார். கம்போடிய தலைநகரிலுள்ள விகாரைக்கு வழிபாடுகளுக்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பௌத்த தர்மம் தொடர்பில் தௌிவுபடுத்தும் செயற்றிட்டங்களுக்காக இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இருநாடுகளும் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கம்போடிய பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.