எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் விலைத்திருத்தம்

எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் விலைத்திருத்தம்

by Staff Writer 10-08-2019 | 3:37 PM
Colombo (News 1st) விலைச்சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைத்திருத்தம் இன்று மேற்கொள்ளப்படாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. விலைச்சூத்திரக்குழு எதிர்வரும் 13 ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய தினம் எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாதாந்தம் 10 ஆம் திகதி விலைச்சூத்திரக்குழு கூடி எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.