ஆக்‌ஷன் ஹீரோவாகக் களமிறங்கும் யோகி பாபு

ஆக்‌ஷன் ஹீரோவாகக் களமிறங்கும் யோகி பாபு

by Bella Dalima 10-08-2019 | 4:38 PM
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகி பாபு ஆக்‌ஷன் ஹீரோவாகக் களமிறங்குகிறார். யோகி பாபுவை மையமாக வைத்து தற்போது “காதல் மோதல் 50/50” எனும் ஆக்‌ஷன் கலந்த பேய் படம் உருவாகி வருகிறது. தரண்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படமான "த்ரயா" -வின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் யோகிபாபுவிற்காக அமைக்கவுள்ளார். லிபிசினி கிராப்ட்ஸ் நிறுவனம் மூலம் வி.என்.ஆர் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.