தன்சானியாவில் பெட்ரோல் லொறி வெடித்ததில் 57 பேர் பலி; 65 பேர் காயம்

தன்சானியாவில் பெட்ரோல் லொறி வெடித்ததில் 57 பேர் பலி; 65 பேர் காயம்

தன்சானியாவில் பெட்ரோல் லொறி வெடித்ததில் 57 பேர் பலி; 65 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2019 | 4:27 pm

தன்சானியாவில் பெட்ரோல் லொறி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி வெடித்ததில் 57 பேர் உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் காயமடைந்துள்ளனர்.

தான்சானியாவின் தலைநகரான டார் எஸ் சலாம் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோரோகோரோ என்ற இடத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற லொறி கவிழ்ந்துள்ளது.

இதன்போது, லொறியிலிருந்த பெட்ரோல் வீதியில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதனை எடுத்துச்செல்ல பாத்திரங்கள், வாளிகளுடன் மக்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக லொறி வெடித்துச் சிதறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீக்காயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்