ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2019 | 6:06 pm

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா (36) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28 சதங்களுடன் 9,282 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

முச்சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரரும் இவர்தான். 2012 ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்துடனான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 311 ஓட்டங்களை ஆம்லா அடித்திருந்தார்.

தென்னாப்பிரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத அணித்தலைவராக விளங்கிய ஹஷிம் ஆம்லா, 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கினார்.

அனைத்து போட்டிகளிலுமாக ஹஷிம் ஆம்லா 349 போட்டிகளில் பங்கேற்று 55 சதங்களுடன் 18,000-க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 27 சதங்களே தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச எண்ணிக்கையாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்