நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை குழாம் அறிவிப்பு

நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை குழாம் அறிவிப்பு

நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை குழாம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2019 | 9:45 pm

Colombo (News 1st) நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்தக் குழாத்தில் தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், அகில தனஞ்சய ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமால் இறுதியாக இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார்.

அகில தனஞ்சய பந்தை வீசி எறிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடை விதிக்கப்பட்டு, பந்து வீச்சு பாணியை மாற்றிக்கொண்டதன் பின்னர் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

உபாதையிலிருந்து மீண்டு வந்த அஞ்சலோ மெத்யூஸிற்கும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம் கிடைத்துள்ளது.

லஹிரு திரிமான்ன, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, லசித் அம்புல்தெனிய ஆகியோரும் இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

சுரங்க லக்மால், லஹிரு குமார, ஓஷத பெர்னாண்டோ, லக்சான் சந்தகேன், விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய வீரர்களாவர்.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்