சஜித் பிரேமதாச தான் வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளர்: மங்கள சமரவீர

by Bella Dalima 09-08-2019 | 8:26 PM
Colombo (News 1st) சஜித் பிரேமதாச தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளர் என தாம் நினைத்தாலும் அத்தீர்மானத்தை பாராளுமன்ற குழுவும் செயற்குழுவும் தான் தீர்மானிக்க வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவுக்குழு ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என தெரிவித்த மங்கள சமரவீர, வெற்றிபெறும் வேட்பாளரை விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார். யாழ். வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவினை முன்னிட்டு நீச்சல் தடாகம் திறந்து வைக்கப்பட்ட போதே மங்கள சமரவீர இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்