காற்றாழை செய்கையை விஸ்தரிக்க தீர்மானம்

காற்றாழை செய்கையை விஸ்தரிக்க தீர்மானம்

காற்றாழை செய்கையை விஸ்தரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2019 | 6:14 pm

Colombo (News 1st) விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில், காற்றாழை செய்கையை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் விவசாயத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலக பிரிவுகளைக் கேந்திரமாகக் கொண்டு கற்றாழை செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்