ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் திறப்பு

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் திறப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2019 | 8:05 pm

Colombo (News 1st) ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆழிக்குமரன் ஆனந்தன் என்று அழைக்கப்படும் விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் 1943 ஆம் ஆண்டு பிறந்தார்

இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஆனந்தன் மெது நடை , நடனம் போன்ற பல செயற்பாடுகளில் சாதனை படைத்தார்.

தொடர்ந்தும் தனது முயற்சியைக் கைவிடாத ஆனந்தன், 1975 ஆம் ஆண்டு மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச்சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தித் திரும்பினார்.

ஆழிக்குமரன் ஆனந்தன் பாக்கு நீரிணையைக் கடந்ததன் மூலம் உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்