அர்ஜுன மகேந்திரனுக்கு முதலாவது மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் பிடியாணை

by Staff Writer 09-08-2019 | 3:31 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பான வழக்கின் முதலாவது பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு முதலாவது மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கின் 10 ஆவது பிரதிவாதியான அஜான் கார்திய புஞ்சிஹேவா என்பவருக்கான அறிவித்தல் அறிக்கையை தயாரித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் அர்ஜுன மகேந்திரனுக்கான பிடியாணை தொடர்பான அறிக்கையும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் சட்ட மா அதிபரால், முதலாவது மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.