by Staff Writer 09-08-2019 | 9:24 PM
Colombo (News 1st) கம்போடியா மற்றும் இலங்கைக்கு இடையில் சமய ரீதியிலான விடயங்களை மேலும் பலப்படுத்தும் வகையில், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டின் சமய நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொண்டிருந்தார்.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் அமைந்துள்ள, UNESCO-வின் உலக மரபுரிமை உரித்தாக பேணப்படுகின்ற அங்கோர் புனித பூமிக்கும் ஜனாதிபதி இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பழமைவாய்ந்த கம்போடிய கட்டிடக் கலையின் பாரம்பரிய படைப்பாக அங்கோர் வட் விகாரை திகழ்கின்றது.
சுமார் 170 ஏக்கரில் அமைந்துள்ள அங்கோர் வட், 12 ஆம் நூற்றாண்டில் கம்போடியாவின் சூர்யவர்மன் எனும் மன்னனால் கட்டப்பட்டது. உலகில் உள்ள பாரிய மதஸ்தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து அங்கோர் நகரில் அமைந்துள்ள பயோன் விகாரைக்கும் ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார்.
தேரவாத பௌத்தத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு கம்போடிய மதத்துறவிகள் தமது ஆதரவை நல்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.