குழந்தையுடன் வந்த பெண் MP சபையிலிருந்து வௌியேற்றம்

கென்ய நாடாளுமன்றத்திற்கு குழந்தையுடன் வந்த பெண் எம்பி வௌியேற்றம்

by Chandrasekaram Chandravadani 08-08-2019 | 9:46 AM
Colombo (News 1st) கென்யாவில் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பெண் உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார். தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக தனது 5 மாத குழந்தையை நாடாளுமன்றத்திற்கு  அழைத்துவந்ததாக ஜூலைக்கா ஹசன் (Zuleika Hassan) எனும் குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குழந்தையை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இது வெட்கக் கேடான செயல் என விமர்சித்துள்ளனர். அதையடுத்து, ஹசனை வௌியேறுமாறு உத்தரவிட்ட சபாநாயகர் கிறிஸ்தோபர் ஒமுலெலே (Christopher Omulele), குழந்தையை விட்டுவிட்டு சபைக்குத் தனியே திரும்பலாம் எனக் கூறியுள்ளார். இதன் பின்னர், ஜூலைக்கா ஹசன் வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கென்ய நாடாளுமன்ற விதிகளின் படி, அந்நியர்கள் அதன் கட்டடத்துக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது. குறித்த அந்நியர் எனும் பட்டியலில் குழந்தைகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.