லிட்ரோ கேஸ் நிறுவனம் தொடர்பான வழக்கின் 3 பிரதிவாதிகளும் விடுதலை

லிட்ரோ கேஸ் நிறுவனம் தொடர்பான வழக்கின் 3 பிரதிவாதிகளும் விடுதலை

லிட்ரோ கேஸ் நிறுவனம் தொடர்பான வழக்கின் 3 பிரதிவாதிகளும் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 2:26 pm

Colombo (News 1st) லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கின் 3 பிரதிவாதிகளும்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி காமினி செனரத் மற்றும் பியதாச குடாபாலகே, லசந்த பண்டார ஆகிய மூவரும் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு முதலாவது மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று தீர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகாமையால், அவர்களை விடுவித்து விடுதலை செய்வதற்கு நீதிபதிகள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்