சர்வதேச மத்தியஸ்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

சர்வதேச மத்தியஸ்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

சர்வதேச மத்தியஸ்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 2:11 pm

Colombo (News 1st) சர்வதேச மத்தியஸ்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

சிங்கப்பூர் கலந்துரையாடல் மாநாட்டில், இந்த ஒப்பந்தத்தில் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் வர்த்தக இருதரப்பு ஒப்பந்தங்களில் எழும் பிணக்குகளை இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள முடியும்.

நீதித்துறை செயற்பாடுகளை வலுப்படுத்தும் வாய்ப்புகளையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும்.

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மத்தியஸ்த வகிபாகம் இந்த ஒப்பந்தம் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உருவாக்கம் பெறும்.

இந்த மத்தியஸ்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய விரும்புவார்கள் என நீதியமைச்சுத் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்