காற்றுடனான மழை காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகத் தடை

காற்றுடனான மழை காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகத் தடை

காற்றுடனான மழை காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகத் தடை

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 10:36 am

Colombo (News 1st) பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தெஹிவளை, மாலபே, ஹோமாகம, கொஸ்கம, புத்தளம், நிக்கவரெட்டிய மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் தாமதமடைந்த களனிவௌி, சிலாபம் மற்றும் பிரதான ரயில் மார்க்கங்கள் ஊடான ரயில் சேவை மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்