இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக கம்போடிய மன்னர் தெரிவிப்பு

இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக கம்போடிய மன்னர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 3:30 pm

Colombo (News 1st) பொருளாதார, வர்த்தக மற்றும் சமூக ரீதியாக தமது நாடு இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக கம்போடிய மன்னர் Norodom Sihamoni தெரிவித்துள்ளார்.

கம்போடியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு மன்னரை இன்று முற்பகல் சந்தித்தபோதே மன்னர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அடைந்துவரும் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கம்போடிய மன்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக இலங்கையுடனான தமது நாட்டின் உறவை நினைவுகூர்ந்த கம்போடிய மன்னர், தமது அழைப்பின் பிரகாரம் நாட்டிற்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கு நன்றிகளையும் கூறியுள்ளார்.

இதேவேளை, கம்போடிய தலைநகரில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர தூபிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலர் அஞ்சலி செலுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்