அமெரிக்கா செல்வோருக்கு சர்வதேச மன்னிப்புச் சபை பயண எச்சரிக்கை

அமெரிக்கா செல்வோருக்கு சர்வதேச மன்னிப்புச் சபை பயண எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 11:44 am

Colombo (News 1st) அமெரிக்கா செல்பவர்களுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் காரணமாக அங்கு பயணிப்போர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைக் கட்டடத் தொகுதிகள் மற்றும் நட்ச்சத்திர விடுதிகள் உள்ளிட்ட சன நெரிசல் மிக்க பகுதிகளுக்குச் செல்லும்போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, ஏனைய நாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்வாறான பயணத் தடைகளை விதிப்பதால், அதற்கு இணையாக இவ்வாறான எச்சரிக்கை விடுப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்