கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் ஆணைக்குழுவில்...

கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் அழைப்பு

by Staff Writer 07-08-2019 | 9:42 AM
Colombo (News 1st) கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (07) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். பாடப் புத்தகங்களில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் நிழற்படங்களை அச்சிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய, கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளரான I.M.K.B. இலங்கசிங்கவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறவுள்ளது. குறித்த இடமாற்றம் சட்டத்திற்கு புறம்பானது எனவும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் அதனை இரத்து செய்யுமாறும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டது. அது குறித்து விசாரணை செய்வதற்கு நேற்றைய தினம் ஆஜராகுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், வேலைப்பளு காரணமாக சமூகமளிக்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.