இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகள் இரத்து:பாகிஸ்தான்

இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை இரத்து செய்ய பாகிஸ்தான் தீர்மானம்

by Bella Dalima 07-08-2019 | 8:37 PM
இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளையும் இரத்து செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்படுவதாக இந்திய மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இன்றைய தினம் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பேரவை கூடியது. இந்த கூட்டத்தின் போது இந்தியா தொடர்பில் 5 தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளைக் கைவிடல், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முதலாவது தீர்மானமாகும். இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை சமர்ப்பித்தல் இரண்டாவது தீர்மானமாகும்.