டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை வௌியீடு

டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை வௌியீடு

டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2019 | 2:14 pm

Colombo (News 1st) டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

ஆசஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அபாரத் திறமையை வெளிப்படுத்திய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் நேதன் லியோன் ஆகியோர் புதிய தரவரிசையில் முன்னேற்றமடைந்துள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைர் ஸ்டீவன் ஸ்மித் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நிறைவுக்கு வந்த ஆசஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வெளிப்படுத்திய ஆற்றல்களுக்கு அமைய அவர் இந்த நிலையை அடைந்துள்ளார்.

ஆசஷ் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தத் தரவரிசையில் ஸ்டீவன் ஸ்மித் நான்காமிடத்தில் நீடித்தார்.

இந்திய அணியின் செட்டிஸ்வர் புஜாரா மூன்றாமிடத்தில் நீடித்தார்.

எவ்வாறாயினும், ஆசஷ் தொடரின் முதல் போட்டியில் 2 சதங்கள் உள்ளடங்களாக ஸ்டீவன் ஸ்மித் 286 ஓட்டங்களை குவித்தார்.

இந்த ஆற்றலுக்கு அமைய 903 புள்ளிகளுடன் ஸ்டீவன் ஸ்மித் மூன்றாமிடத்துக்கு முன்னேறினார்.

இந்தப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்திலும் நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றனர்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் நிரல்படுத்தலில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மிங்ஸ் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இதனிடையே, டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் நிரல்படுத்தலில் அவுஸ்திரேலியாவின் நேதன் லியோன் 732 புள்ளிகளுடன் 13 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்