கண்டி – வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் OIC பணிநீக்கம்

கண்டி – வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் OIC பணிநீக்கம்

கண்டி – வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் OIC பணிநீக்கம்

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2019 | 2:35 pm

Colombo (News 1st) கண்டி – வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் செயற்பாடே பணிநீக்கத்திற்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வெலம்பொட பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 76 வாள்கள் மற்றும் 13 கோடரிகளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இல்லாத சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலுக்கு மீண்டும் கையளித்துள்ளதாக பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்