ரசிகரை திருமணம் செய்துகொண்ட ராக்கி சாவந்த்

ரசிகரை திருமணம் செய்துகொண்ட ராக்கி சாவந்த்

ரசிகரை திருமணம் செய்துகொண்ட ராக்கி சாவந்த்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2019 | 5:31 pm

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், லண்டனைச் சேர்ந்த இந்தியரைத் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார்.

மும்பையில் ஜூலை 20 ஆம் திகதி ராக்கி சாவந்த் – ரித்தேஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. லண்டன் வாழ் இந்தியரான 36 வயது ரித்தேஷுடனான காதல் குறித்து ஒரு நேர்காணலில் ராக்கி சாவந்த் கூறியதாவது,

வழக்கமாக ரசிகர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகள் எனக்கு வரும். ஒருநாள் நான் மிகவும் கவலையோடு இருந்தேன். அப்போது ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறீர்கள் என்று கேட்டு எனக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பினார் ரித்தேஷ். நான் அதிர்ந்துவிட்டேன். நான் அந்த மனநிலையில் உள்ளதாக எப்படி நினைத்தீர்கள் என அவரிடம் கேட்டேன். நீங்கள் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று எண்ணும் அளவுக்கு நான் உங்களுடைய நீண்ட நாள் ரசிகன் என்று பதில் அளித்தார். அப்போதே அவர் மீது காதல் கொண்டேன். அவரை ஒருநாள் திருமணம் செய்வேன் என அப்போதே தெரியும்.

என கூறியுள்ளார்.

திருமணச் செய்தியை அறிந்தால், படங்களில் வாய்ப்புக் கிடைக்காது என்பதால் அதனை ரகசியமாக வைத்திருந்ததாக ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

மேலும், தனது கணவர் டொனால்ட் ட்ரம்பின் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்