மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2019 | 8:30 pm

Colombo (News 1st) மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என தாம் நம்புவதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நவம்பர் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் நடைபெறும் என்பதை அறிவோம். ஆனால், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நடத்துவதாக இருந்தால், உறுதியான தீர்மானத்தை 10 நாட்களுக்குள்ளேயாவது எமக்கு அறிவிக்க வேண்டும். இல்லாவிடின், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதனை நடத்த முடியாது. ஜனாதிபதித் தேர்தலை அடுத்தேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சிப்போம். மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்து சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு நாம் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்

என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்