மடுமாதா திருத்தல ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மடுமாதா திருத்தல ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மடுமாதா திருத்தல ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2019 | 7:14 pm

Colombo (News 1st) மன்னார் மடுமாதா திருத்தலத்தின் ஆவணி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது.

இன்று மாலை 6 மணியளவில் ஆரம்பமான உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மடு மாதா திருத்தலத்தின் நவநாள் ஆராதனைகளில் எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் திவ்விய நற்கருணை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருவிழா கூட்டுத்திருப்பலியை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் ஏனைய ஆயர்களும் இணைந்து ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

மடு அன்னையின் திருச்சொரூப பவனியுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்