நிந்தவூர் கடலில் மூழ்கி குழந்தை பலி

நிந்தவூர் கடலில் மூழ்கி குழந்தை பலி

நிந்தவூர் கடலில் மூழ்கி குழந்தை பலி

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2019 | 3:28 pm

Colombo (News 1st) அம்பாறை – நிந்தவூர் கடலில் மூழ்கி குழந்தை ஒன்றை உயிரிழந்துள்ளது.

இன்று காலை 6.45 அளவில் தனது தாத்தாவுடன் கடற்கரையோரத்திற்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலியாஸ் மொஹமட் ஆதில் எனும் ஒரு வருடம் 9 மாத குழந்தையே அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காற்றுடனான வானிலையால் குறித்த கடற்பிராந்தியம் கொந்தளிப்பாகக் காணப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்