தேர்தல் வேட்பாளர்களுக்காக சமயத் தலைவர்களின் பரிந்துரைகளை வெளியிடும் நிகழ்வு

தேர்தல் வேட்பாளர்களுக்காக சமயத் தலைவர்களின் பரிந்துரைகளை வெளியிடும் நிகழ்வு

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2019 | 8:17 pm

Colombo (News 1st) இலங்கையின் தேர்தல் வேட்பாளர்களுக்காக சமயத் தலைவர்களின் பரிந்துரைகளை வெளியிடும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.

சர்வமதத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரும் சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத் தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களது தகைமை தொடர்பில் ஆராய்வது, தேர்தலுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது என்பன சர்வமதத் தலைவர்கள் முன்வைத்த பரிந்துரைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த பரிந்துரைகள் அடங்கிய ஆவணத்தில் சர்வமதத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்