சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2019 | 3:41 pm

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் (Dale Steyn) சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

டேல் ஸ்டெய்ன் கடந்த 2004 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

இதுவரை அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 439 விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் டேல் ஸ்டெய்ன் முதலிடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் 8 ஆம் இடத்திலுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டேல் ஸ்டெய்ன் எதிர்வரும் நாட்களில் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாகவிருந்த அனைவருக்கும் அவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்